Advertisment

'புதிய கல்விக் கொள்கையை ஏற்க தயாராக வேண்டும்' -பிரதமர் மோடி உரை

 'We must be ready to adopt the new education policy' - Prime Minister Modi's speech

பிரதமர் நரேந்திர மோடி புதிய கல்விக் கொள்கை குறித்து இன்று உரையாற்றினார், அந்த உரையில்,

Advertisment

“முன்னேறி செல்ல சீர்திருத்தமே ஒரே வழி. எதிர்காலத்திற்கு இளைஞர்கள் தயாராக உள்ளனர் என்பதை இந்த சீர்திருத்தம் உறுதி செய்கிறது. கல்விக் கொள்கையில்செய்த திருத்தத்தால்சிலர்வருத்தம் அடைந்துள்ளனர். புதிய கல்விக் கொள்கை வருங்கால சக்திகளை, வரும் காலங்களில் வரும் சவால்களை சந்திக்க தயார் படுத்தும். இந்தியாவை வலுவான நாடாக உருவாக்க, வளர்ச்சியைஅதிகரிக்க புதிய கல்விக் கொள்கை வழி வகுக்கும்.

Advertisment

21ஆம் நூற்றாண்டுக்கான அடித்தளத்தை புதிய கல்விக் கொள்கை அமைக்கும். முறையான கல்வி தேவை என்பதற்காகவே புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. தாய் மொழியில் சிறப்பாக கல்வி கற்கலாம். தாய்மொழியிலேயே கல்வி கற்பதன் மூலம் மாணவர்கள் சிறப்பாக கற்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்தும்இல்லை. வெறுமனே பாடங்கள் படிப்பதைவிட கேள்வி கேட்கவும், ஆய்ந்தறியும் வகையில் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

கல்விக் கொள்கை தொடர்பான ஆரோக்கியமான விவாதங்கள் கல்விமுறைக்கு நன்மை பயக்கும். புதிய கல்விக் கொள்கையை ஏற்க தயாராக வேண்டும். கல்விக் கொள்கை மாற்றத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும், அதற்கு தயாராக வேண்டும்” என்றார்.

modi NEW EDUCATION POLICY
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe