Skip to main content

''எங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது'' - முதல்வர் நாராயணசாமி பேட்டி  

Published on 16/02/2021 | Edited on 16/02/2021

 

 '' We have a majority '' - Chief Minister Narayanasamy interview

 

புதுச்சேரியில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி காமராஜ் நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜான்குமார், அவரது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் அதற்கான கடிதத்தை வழங்கியுள்ளார்.

 

புதுச்சேரியில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா செய்துள்ளது அம்மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்வது என சபாநாயகர் சிவக்கொழுந்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமயிலான அமைச்சரவை ராஜினாமா செய்ய இருப்பதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி மேலும் பரபரப்பைக் கூட்டி இருக்கிறது. 

 

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ''இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் என்னென்ன ஷரத்துகள் கூறப்பட்டுள்ளதோ அதன் அடிப்படையில் செயல்படுவோம். எதிர்க்கட்சிகள் எங்களைப் பதவி விலகச் சொல்வார்கள், ஆனால் எங்களுக்குப் பெரும்பான்மை இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்ட அந்த விதிமுறைப்படி செயல்படுவோம்'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சுற்றித்திரிந்த சிறுவன்; பெற்றோரிடம் ஒப்படைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
cpm rescued boy who was wandering in Chidambaram and handed him over to his parents

புதுச்சேரி மாநிலம் மரப்பாலம் திருப்பூர் குமரன் நகரைச் சேர்ந்த முனுசாமி தீபா தம்பதியரின் மகன் கணேசன் (10 ) இந்த சிறுவன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இவரை அவரது பெற்றோர்கள் கண்டித்ததால் சிறுவனுக்கு உறவினர்கள் அளித்த ரூ 500 கையில் இருந்ததால் பெற்றோர்கள் மீது உள்ள கோபத்தில் அதை எடுத்துக் கொண்டு புதுச்சேரியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த பேருந்தில் ஏறி சிதம்பரத்திற்கு வந்துள்ளார்.

அப்போது அவர் திங்கள்் கிழமை இரவு கஞ்சி தொட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் அப்பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார்.  இதனை கண்காணித்த அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்குழு உறுப்பினரான சின்னையனிடம் ஒப்படைத்தனர்.  சிறுவனிடம் அவர் பேச்சு கொடுத்து அவர் யார் எங்கிருந்து வந்தார் என்பது குறித்த அனைத்து விவரங்களையும் கேட்டுள்ளார்.

பின்னர் இதனிடையே அவரது தாயின் செல்போன் எண்ணை அந்த சிறுவன் கூறியதால் அவரது தாயருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சிறுவனின் குடும்பத்தார் புதுச்சேரி காவல் நிலையத்தில் இது குறித்து ஏற்கனவே புகார் செய்துள்ளனர். மகன் சிதம்பரத்தில் உள்ளான் என்ற தகவல் கேட்டு அவர்கள் மகிழ்ச்சி அடைந்து அங்கிருந்து காரில் புறப்பட்டு உடனடியாக சிதம்பரத்திற்கு திங்கள் கிழமை இரவு வந்தனர்.

இதனிடையே சிறுவனை மீட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் குழு உறுப்பினர் சின்னையன் சிறுவனுக்கு அவரது வீட்டில் உணவு வழங்கி கட்சியின் அலுவலகத்திற்கு அழைத்து வந்து  அவரது  பெற்றோர்களிடம் ஒப்படைத்தார். மகன் கிடைத்த மகிழ்ச்சியில் சிறுவனின் பெற்றோர்கள் உறவினர்கள் கண்ணீர் மல்க அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ் ஜி.  ரமேஷ்பாபு, நகர செயலாளர் ராஜா,  நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; சுகாதாரத்துறை விசாரணை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Youth sacrifice during treatment Health investigation

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 24 ஆம் தேதி (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்திருந்தார். அப்போது மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹேமச்சந்திரன் உயிரிழந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் தீர்த்தலிங்கம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.