Published on 19/07/2018 | Edited on 19/07/2018

இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் 18 ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட கிராமங்கள் மின்சாரமின்றி தவித்து வந்த நிலையில் 14,500 கிராமங்களுக்கு பாஜக ஆட்சியில் மின்சாரம் கொடுக்கப்பட்டுவிட்டது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சவ்பாக்கியா எனும் அனைவருக்கும் மின்சாரம் என்ற திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகளுடன் காணொளி மூலம் உரையாடல் நடத்திய மோடி, இந்தியாவின் வளர்ச்சியில் கிழக்கு மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடந்த 2005 -2009 ஆட்சியில் அனைவருக்கும் மின்சாரம் தருவதாக கூறிய காங்கிரஸ் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை
ஆனால் தற்போது பாஜக அரசு 14,500 கிராமங்களுக்கு மின்சாரம் கொடுத்து சாதனை படைத்துள்ளது என கூறினார்.