Skip to main content

'2047 ஆம் ஆண்டுக்குள் பொன்னான தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்'-குடியரசுத் தலைவர் உரை

Published on 31/01/2023 | Edited on 31/01/2023

 

 'We have to build a golden nation by 2047'- Republic President's speech

 

குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்கியது. அவையில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ''இந்தியா தனது பிரச்சனைகளைத் தீர்க்க பிற நாடுகளைச் சார்ந்திருக்காது. உலகின் பார்வையில் இந்தியாவின் நிலை என்பது பெருமளவில் மாறி உள்ளது. நாட்டின் இளைஞர்களும், பெண்களும் முன்னணியில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 2047 ஆம் ஆண்டுக்குள் பொன்னான அத்தியாயங்களைக் கொண்ட ஒரு தேசத்தைக் கட்டி எழுப்ப வேண்டும். இந்த ஆண்டில் தன்னறிவு பெற்ற நாடாக நாம் தொடர்ந்து வேகமாக முன்னேறி வருகிறோம்.

 

மற்ற நாடுகள் தங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கின்றன. கரோனா காலத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு பாதுகாப்பு காரணமாக விளங்கியது. ஏழைகளுக்கும், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் மத்திய அரசு தீவிரமாக பணியாற்றுகிறது. வறுமை இல்லாத, நடுத்தரவர்க்கமும், செழிப்பான இளைஞர்களும் முன்னிலையில் நிற்கும் இந்தியாவாக இருக்க வேண்டும். நிலையான, அச்சமற்ற, தீர்க்கமான அரசு பெரிய கனவுகளை நனவாக்கும் நோக்கில் செயல்படுகிறது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

எமர்ஜென்ஸி குறித்து மக்களவையில் ஜனாதிபதி உரை; எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Opposition parties strongly protest on President's Speech in Lok Sabha

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, நேற்று (26-06-24) நடைபெற்ற மக்களவை சபாநாயகர் தேர்தலில் பாஜகவின் ஓம் பிர்லா, சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, இன்று (27-06-24) குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாடாளுமன்றத்திற்கு வந்து உரையாற்றினார். அப்போது அவர், “இன்னும் சில மாதங்களில் இந்தியா குடியரசு நாடாக 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்திய அரசியலமைப்பு கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வொரு சவாலையும், ஒவ்வொரு சோதனையையும் தாங்கி நிற்கிறது. அரசியலமைப்புச் சட்டம் உருவாகும் போது கூட, இந்தியா தோல்வியடைய வேண்டும் என்று விரும்பும் சக்திகள் உலகில் இருந்தன. அரசியல் சட்டம் அமலுக்கு வந்த பிறகும் பலமுறை தாக்கப்பட்டது. இன்று ஜூன் 27. ஜூன் 25, 1975 அன்று அமல்படுத்தப்பட்ட அவசரநிலை, அரசியலமைப்பின் மீதான நேரடித் தாக்குதலின் மிகப்பெரிய இருண்ட அத்தியாயமாகும். அப்போது, ஒட்டுமொத்த நாடும் கோபமடைந்தது. ஆனால், குடியரசின் மரபுகள் இந்தியாவின் மையத்தில் இருப்பதால், அத்தகைய அரசியலமைப்புக்கு எதிரான சக்திகளை எதிர்த்து நாடு வெற்றி பெற்றது” என்று பேசினார். 

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நிகழ்த்திய உரை, பா.ஜ.க அரசு எழுதிக் கொடுத்த பொய்களாக நிரம்பியுள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில், திரி்ணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி மஹுவா மொய்த்ரா செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘303ல் இருந்து 240க்கு வந்திருப்பதை அவர்களால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான் பா.ஜ.க அரசாங்கத்தின் பிரச்சனை. அவர்களிடம் 303 இடங்கள் இருப்பதாக நினைத்து அவர்கள் உரையைத் தயாரித்திருக்கிறார்கள். அதனால்தான் அரசாங்கம் சிறுபான்மையாக இருக்கும்போது தெளிவான பெரும்பான்மை அரசாங்கம் இருப்பதாக அவர் கூறுகிறார்” என்று கூறினார்.

அதே போல், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறுகையில், “எமர்ஜென்சி காலத்தில் சிறையில் இருந்த மக்களுக்கு பா.ஜ.க என்ன செய்தது? அவர்களுக்கு மரியாதையையும் ஓய்வூதியத்தை சமாஜ்வாதி வழங்கியது. இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறுகிறது என்று கூறுகின்றனர். ஆனால், நமது விவசாயிகளை வளப்படுத்தியதா? நாம் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருந்தால், ஏன் பல இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள்? ஏன் அக்னிபாத் போன்ற திட்டம்? விலைவாசி உயர்வை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை?” என்று கடுமையாகப் பேசினார்.

Next Story

“தேர்தல் ஆணையத்திற்கு நன்றி” - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
“Thank you Election Commission” - President Draupathi Murmu

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் தேர்தல் நேற்று (26.06.2024) நடைபெற்றது. இதில் பாஜகவின் ஓம் பிர்லா, காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு குதிரைப்படை வீரர்களின் பாரம்பரிய அணிவகுப்பு முறைப்படி குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வந்தார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாடாளுமன்றத்திற்கு வந்தடைந்தவுடன் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் செங்கோல் ஏந்தி வழி நடத்தி சென்றார். 

“Thank you Election Commission” - President Draupathi Murmu

இதனையடுத்து திரௌபதி முர்மு பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், “கோடிக்கணக்கான நாட்டு மக்கள் சார்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது உலகின் மிகப்பெரிய தேர்தல். ஜம்மு காஷ்மீரில் பல ஆண்டுகால கால வாக்குப்பதிவுகளின் சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. கடந்த 4 தசாப்தங்களாக காஷ்மீரில் குறைந்த வாக்குப்பதிவைக் கண்டது. ஆனால் காஷ்மீர் இந்த முறை இந்தத் தேர்தல் அதற்குத் தகுந்த பதிலடி கொடுத்தது. 

“Thank you Election Commission” - President Draupathi Murmu

6 தசாப்தங்களுக்குப் பிறகு நாட்டில் முழுமையான பெரும்பான்மையுடன் 3வது முறையாக நிலையான அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் மூன்றாவது முறையாக இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மக்களுக்குத் தெரியும். இந்த மக்களவை அவர்களின் எண்ணங்களை நிறைவேற்ற முடியும் என்று. 18 வது மக்களவை பல வழிகளில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க மக்களவை ஆகும். நாட்டின் அரசியலமைப்பின்படி வரவிருக்கும் அமர்வுகளில் இந்த பட்ஜெட் அரசாங்கத்தின் தொலைநோக்கு கொள்கைகள் மற்றும் பெரிய பொருளாதாரம் மற்றும் எதிர்காலத்திற்கான ஒரு பயனுள்ள ஆவணமாக இருக்கும். சமூக மற்றும் பல வரலாற்று சாதனைகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும்.

சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவை இந்தியாவை உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக மாற்றியுள்ளது. நாட்டில் பல்வேறு தொற்றுநோய்கள் மற்றும் மோதல் போக்குகள் இருந்தபோதிலும் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 11 வது இடத்தில் இருந்து 5வது பெரிய பொருளாதாரமாக உயர்ந்தது. உலகின் சில பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் முடிவுகளால் இந்தியா இந்த வளர்ச்சி விகிதத்தை அடைய முடிந்தது. இந்தியாவை உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாற்றும் நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார். பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்ததாகக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கூறியபோது எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மணிப்பூர், மணிப்பூர் என்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர்.