MODI

Advertisment

இலங்கையை நான் பக்கத்து நாடாக மட்டும் பார்க்கவில்லை தெற்கு ஆசியாவிலேயே நம்பிக்கைக்குரிய ஒரு கூட்டாளி நாடாகவே இலங்கையை பார்க்கிறேன் என மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் நெருக்கடிகால ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்துவதற்கான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்காக டெல்லியிலிருந்து காணொளி காட்சிமூலம் பேசிய பிரதமர் மோடி

''நல்ல தருணமோ மோசமான தருணமோ எல்லா நேரத்திலும் கூப்பிட குரலுக்கு இலங்கைக்கு முதலில் பதிலளிக்கும் நாடு இந்தியா '' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இலங்கையில் மேற்கொண்ட பயணத்தின் பொழுது அங்கு நெருக்கடிகால ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்த இந்தியாஉதவும் என ஏற்கனவே உறுதியளித்திருந்ததைகுறிப்பிட்டமோடி அதை தற்போது நிறைவேற்றி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.