Advertisment

”70 ஆண்டுகளாக நாங்கள் உருவாக்கியதை ஐந்தே ஆண்டுகளில் சிதைத்துவிட்டனர்” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

 Rahul Gandhi

Advertisment

பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை மற்றும் ஜிஎஸ்டி வரி அதிகரிப்பை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, "நாடாளுமன்றத்தில் பேச எங்களுக்கு அனுமதி இல்லை. எங்களை நடுரோட்டில் வைத்து கைது செய்கிறார்கள். இந்த அரசாங்கத்திற்கு 4, 5 பேரின் நலன்களைக் காப்பதில் மட்டுமே அக்கறையுள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக ஒவ்வொரு செங்கல்லாக நாங்கள் உருவாக்கி கட்டமைத்துள்ளோம். ஆனால் ஐந்தே ஆண்டுகளில் அத்தனையையும் சிதைத்துவிட்டார்கள். இந்த அரசாங்கத்தின் ஒரே கொள்கை மக்கள் பிரச்சனைகளை புறக்கணிக்க வேண்டும் என்பது மட்டுமே. ஜனநாயகம் மரணிப்பதை இந்தியா கண்டுகொண்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe