rajnath singh

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் பாஜக முறைகேடு செய்துள்ளது என்று கடந்த ஒரு வருடமாக மோடி மீது குற்றச்சாட்டு வைத்து வருகிறார். அதற்கு ஏற்றார் போல், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஒவ்வொரு முறை ஒன்று பேசி வருகிறார். காங்கிரஸை பாஜக விமர்சிக்க, பாஜக காங்கிரஸை விமர்சிக்க என்று இரு கட்சிகளும் தங்களை விமர்சித்து கொண்டெ இருக்கிறது.

Advertisment

இந்நிலையில், ஃப்ரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஃப்ராங்கோயிஸ் ஹாலண்டே, ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக அனில் அம்பானி நிறுவனத்தை இந்திய அரசுதான் பரிந்துரை செய்தது என்று கூறியுள்ளார்.

Advertisment

இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி முதல் பலர் இதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேபோல, பாஜகவினர் இதை மறுத்து வருகின்றனர். அந்த வரிசையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “ ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் வைக்கும் குற்றச்சாட்டு, ஆதாரமற்றது” என்று கூறியுள்ளார். மேலும், ரஃபேல் போர் விமானம் குறித்து முன்னாள் அதிபர் கூறியது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.