mam

Advertisment

மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நகரில் பா.ஜ.க தலைவர் அமித் ஷா தலைமையில் ரத யாத்திரை இன்று தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் இந்த ரத யாத்திரைக்கான அனுமதியை வழங்க முடியாது என மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்துக்கு பதிலளித்துள்ள அரசு இவ்வாறு கூறியுள்ளது. இதனையடுத்து மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரும் ஜனவரி 9 ஆம் தேதி வரை ரத யாத்திரை நடத்த கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடியும் இந்த ரத்த யாத்திரையில் பங்கேற்று உரையாற்ற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.