5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை வகுப்பறைக்குள் புகுந்த பாம்பு கடித்ததில், மாணவி உயிரிழந்த விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

wayanad school girl passed away

Advertisment

Advertisment

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சுல்தான் பத்தேரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் ஷேஹலா என்ற மாணவி 5 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற இவர் வகுப்பறையில் பாடத்தை கவனித்து கொண்டிருந்த போது, வகுப்பறைக்குள் வந்த பாம்பு ஒன்று அவரைக் கடித்துள்ளது. இதனைப் பார்த்த சக மாணவர்கள் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியையிடம் தெரிவித்தனர். ஆனால் நகம் அல்லது கல் எதாவது குத்தியிருக்கும் என கூறிய அந்த ஆசிரியர் தொடர்ந்து பாடம் நடத்தியுள்ளார். பின்னர் மாணவியின் கால்கள் நிறம் மாற ஆரம்பித்த பின்னரும் சக மாணவர்கள் கூறுவதை பெரிதும் பொருட்படுத்தாத ஆசிரியை, மாணவி ஷேஹலாவை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து செல்வார்கள் என்று கூறிவிட்டு பாடத்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த மாணவியின் தந்தை வந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகே மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். நேரமானதால் விஷம் அதிகரித்து மாணவி ஷேஹலா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் கூறியிருந்த நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் அதை உறுதிப்படுத்தியுள்ளார்.