Advertisment

வயநாடு நிலச்சரிவு; பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

landslide

Advertisment

கேரளா மாநிலம், வயநாடு மாவட்டம் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் கடந்த ஜூலை 30ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் முப்படையைச் சேர்ந்த வீரர்கள், பேரிடர் மீட்புப்படையினர் உள்ளிட்ட வீரர்கள் ஆறாவது நாளாக இன்றும் (04.08.2024) மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தது இந்தியாவையே உலுக்கியுள்ளது.

இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி உயிரிழப்புகளின் எண்ணிக்கை 365ஆக உயர்ந்துள்ளது எனக் கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுவரை 365பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 205பேரைக் காணவில்லை எனக் கேரளா அரசு தெரிவித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 2000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வயநாடு நிலச்சரிவு பகுதியில் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தன்னார்வல மீட்புப் படையினர் மட்டுமல்லாது மத்திய அமைப்புகள் சார்பாகவும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வயநாடு நிலச்சரிவு தொடர்பான மீட்புப் பணி மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த அறிக்கையை பிரதமரிடம் மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் தற்போது சமர்ப்பித்துள்ளார். பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த மத்திய அமைச்சர் சார்ஜ் குரியன் இதற்கான அறிக்கையை மோடியிடம் வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Kerala landslide modi wayanad
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe