மும்பையில் 40 தளங்கள் கொண்ட நியூ கஃபே பரேட் என்னும் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தண்ணீர் அருவி போல் கொட்டியுள்ளது. இதனைப் பார்த்த மக்கள் மும்பையில் பெய்த கனமழையில் காரணமாக நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்துள்ளனர். இதனை அடுத்து அருவி போல் நீர் கொட்டுவதை பார்க்க அப்பகுதியில் மக்கள் வர ஆரம்பித்துள்ளனர்.

Advertisment
Advertisment

ஆனால் அக்கட்டிடத்தின் புதிதாக அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கொட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தண்ணீர் தொட்டி விற்பனையாளர்கள் இதற்கு மன்னிப்பு தெரிவித்ததாகவும், பாதிக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளை சரிசெய்து தருவதாக கூறியதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.