மறுசீராய்வு மனு குறித்து பதிலளித்த உ.பி. சன்னி வக்ஃபு வாரியத் தலைவர்...

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு வழங்கியுள்ளது.

waqf chief about ayodhya verdict

இந்த தீர்ப்பின்படி, வக்பு வாரியத்திற்கு அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும், வழக்குக்கு உட்படுத்தப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான அமைப்பை அடுத்த 3 மாதத்தில் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சன்னி வக்ஃபு வாரியம் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யுமா என்ற கேள்வி நிலவி வந்தது. இதற்கு பதிலளித்த உ.பி. சன்னி வக்ஃபு வாரியத் தலைவர் ஜாபர் பாரூக்கி, "உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம், தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறோம். உ.பி. சன்னி வக்ஃப் வாரியம் உச்சநீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யவதற்கான மனுவை தாக்கல் செய்யாது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்" என தெரிவித்தார்.

Ayodhya babri masjid Ram mandir
இதையும் படியுங்கள்
Subscribe