Wall collapse accident; 5 people lost their lives

Advertisment

புதுச்சேரியில் மரப்பாலம் பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பொழுது பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் பலியானோர்எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

புதுச்சேரி மாநில மரப்பாலம் பகுதியில் வசந்தம் நகர் மூன்றாவது குறுக்கு தெருவில் இன்று காலைசாக்கடை கால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென கால்வாயை ஒட்டி இருந்த மதில் சுவர் இடிந்து விழுந்தது. இதில் எட்டு பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். உடனடியாக புதுச்சேரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அங்கு வந்த மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்கள் ஒவ்வொருவராக மீட்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக 2 பேர் உயிரிழந்தனர். தொடர்ச்சியாக மொத்தம் ஏழு பேரும் மீட்கப்பட்ட நிலையில், தற்போது வரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அந்தோணிசாமி, பாலமுருகன், பாக்யராஜ், கமல்ஹாசன், ராஜேஷ் கண்ணன் ஆகிய ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.