ADVERTISEMENT

"பாஸ்டேக் அறிமுகத்திற்கு பின் சுங்கச் சாவடிகளில் காத்திருப்பு நேரம் அதிகரிப்பு" மத்திய அரசு தகவல்...

05:36 PM Feb 04, 2020 | kirubahar@nakk…

பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்ட பிறகு சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரம் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், சுங்கக்கட்டணம் செலுத்துவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை தடுக்கவே இந்த பாஸ்டேக் முறை கொண்டுவரப்பட்டது எனவும் , காரின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்படும் ஒரு சிறிய சிப் மூலம் நாம் செலுத்தவேண்டிய தொகை தானாகவே நமது வங்கி கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும். எனவே மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க முடியும் என்றும் கூறிய மத்திய அரசு கடந்த மாதம் இந்த திட்டத்தை அமல்படுத்தியது.

இந்நிலையில் பாஸ்டேக் குறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, "பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்ட பிறகு சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரம் அதிகரித்துள்ளது உண்மைதான். பாஸ்டேக் அல்லாமல் ரொக்கம் கொடுக்கும் முறையும் இன்னும் நாட்டின் பல்வேறு இடங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் தாமதம் ஏற்படுகிறது. இதுவரையில் 1.4 கோடி பாஸ்டேக் வழங்கியுள்ளோம். விரைவில் காத்திருப்பு நேரம் குறையும்" என தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT