புதுச்சேரி மாநிலத்திலுள்ள கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதையடுத்து நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், மாதந்தோறும் தவறாமல் ஊதியம் வழங்க வேண்டும், அரசு சார்புடைய நிறுவனங்களில் 480 நாட்கள் பணிபுரிந்தவர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை
சட்டப்பேரவை அருகில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்தில் கூட்டுறவு மற்றும் அரசு சார்புடைய நிறுவனங்களின் ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.