Skip to main content

வீடு தேடி வந்த வாக்கு இயந்திரம்; வாக்களித்த 111 வயது மூதாட்டி

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று(19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில் கேரளாவில் மூதாட்டி ஒருவரின் வாக்கைப் பெறுவதற்காக வாக்கு இயந்திரம் வீட்டுக்கே கொண்டுவரப்பட்டு வாக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது வெள்ளிக் கோத்து கிராமம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் குப்பச்சி அம்மா(111 வயது) தள்ளாடும் வயதில் தன்னுடைய வாக்கைச் செலுத்த முடியாமல் குப்பச்சி அம்மா தவித்து வந்தார். இதனால் அவருடைய வாக்கைப் பதிவு செய்வதற்காக தேர்தல் அலுவலர்கள் சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்திருந்தனர்.

அதன்படி காஞ்சங்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்காளராக உள்ள குப்பச்சி அம்மாவின் வீட்டுக்கே தேர்தல் அலுவலர்கள் வாக்கு இயந்திரத்தை எடுத்துச் சென்றனர். மாவட்ட ஆட்சியர் இன்ப சேகரன் தலைமையில் வீட்டுக்குள்ளேயே தற்காலிகமாக வாக்குச்சாவடி மையம் அமைத்து அவருடைய வாக்கை பதிவு செய்தனர். குப்பச்சி அம்மா தன்னுடைய வாக்கை பதிவு செய்த பிறகு மாவட்ட ஆட்சியர் இன்ப சேகரன் அவருக்கு மலர் கொத்து மற்றும் நினைவு பரிசு வழங்கினார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மூதாட்டியின் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண்கள்!

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
women who carried the old woman's body to   cemetery

பொதுவாக மயானத்திற்கு பெண்கள் வரக்கூடாது. நெருக்கமான உறவுகளே உயிரிழந்தால் கூட பெண்கள் மயானத்திற்கு வந்து அடக்கம் செய்யகூடாது. ஆண்கள் மட்டுமே மயானத்திற்கு வந்து உயிரிழந்தவர்களின் உடலை அடக்க செய்யவேண்டும் என்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

அவ்வப்போது தமிழ்நாட்டில் இந்த வழக்கத்தை மாற்றி பெண்களும் மயானத்திற்கு வரலாம் என்று அங்காங்கே சில இடங்களில் பெண்களே தங்களது உறவினர்கள் உடலை மயானம் வரை சுமந்துச் சென்று அடக்கம் செய்து பலரிடம் மாற்றத்தை ஏற்படுத்துகின்றனர். அந்த வகையில் இதே போன்ற ஒரு சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது அப்பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்திராணி என்ற 83 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வந்தார். வயது மூப்பின் காரணமாக   இந்திராணி  உயிரிழந்தார். 

இதனைத் தொடர்ந்து உயிரிழந்த மூதாட்டி இந்திராணியின் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கு வந்த திராவிட கழக பெண்கள் இந்திராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் இந்திராணியின் உடலை திராவிடக் கழக பெண்கள் மயானம் வரை தோலில் சுமந்துச் சென்றனர். அதன் பின்பு அவருக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 
 

Next Story

‘மூளையைத் தின்னும் அமீபா’ - வழிகாட்டுதல்கள் வெளியீடு!

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
Brain-Eating Amoeba Guidelines Released

அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் ‘அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்’ என்ற மூளையைத் தின்னும் அமீபா வகை குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல் குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதில், “தேங்கி இருக்கும் நீரில் குளிப்பதைப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள், குளங்கள், ஏரிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும். அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்னும் மூளையைத் தின்னும் நோய்த் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, குழப்பம், பிரமைகள் மற்றும் வலிப்பு போன்றவை இந்நோயின் அறிகுறிகள் ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபாவிற்கு மூன்று பேர் உயிரிழந்த நிலையில் இந்த வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில், “ கேரளா மாநிலத்தில் அமீபா நுண்ணுயிர் பரவலால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு மூவர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். கேரளாவில் இந்த நுண்ணுயிர் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் இத்தகு பரவல்கள் ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கையுடன் அரசு செயல்பட வேண்டும். அசுத்தமான நீரின் வாயிலாகவே பரவும் இந்த நுண்ணுயிர், குழந்தைகளைத் தொற்றும் ஆபத்து அதிகம் உள்ளதால், மக்களின் உயிர்களைக் காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிக கவனத்தைச் செலுத்துமாறு இந்த தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.