UTTARPRADESH

Advertisment

உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து வருகிறது. ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்துவிட்ட நிலையில், இன்று நான்காம் கட்ட சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை ஏழு மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

உத்தரப்பிரதேசத்தின் தலைநகர் லக்னோ, இந்தியாவை உலுக்கிய பாலியல் வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்த உன்னோவ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தொகுதி அடங்கியுள்ள ரேபரேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அதேபோல் கார் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்ட லக்கிம்பூர் கேரி மாவட்டத்திலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளிலும் கடந்த தேர்தலில் பாஜக வென்றது குறிப்பிடத்தக்கது.