Advertisment

மேகாலயா, நாகாலாந்தில் ஆட்சி யாருக்கு? - விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு

Voting for assembly election in Meghalaya Nagaland state is going on today

வடகிழக்கு மாநிலங்களானமேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் சட்டமன்றத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திரிபுரா மாநிலத்திற்கு கடந்த 16 ஆம் தேதி வாக்குப்பதிவுநடைபெற்றது. இந்த நிலையில், மீதமுள்ள மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களின்சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

Advertisment

மேகாலயா மாநிலத்தில் மொத்தம் 60 சட்டமன்றத் தொகுதிகளும், நாகாலாந்து மாநிலத்தில் மொத்தம் 60 சட்டமன்றத்தொகுதிகளும் உள்ளன. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இரு மாநிலங்களிலும் காங்கிரஸ், பாஜக போன்ற முக்கியக் கட்சிகள் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் காண்கின்றன. இன்று பதிவாகும் வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. அதேபோன்று திரிபுரா தேர்தலில் பதிவான வாக்குகளும்மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

Advertisment

nagaland Voting
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe