ஜெர்மன் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் இந்தியாவில் ரூ. 2,000 கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் தனது 2.0 திட்டத்திற்காக ரூ. 2,000 கோடியை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 250 பொறியாளர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.