Skip to main content

இந்தியாவில் அறிமுகமானது விவோ வி15 ப்ரோ

Published on 20/02/2019 | Edited on 20/02/2019

சீன நிறுவனமான விவோ, தனது புதிய மாடல் ஃபோனான விவோ வி15 ப்ரோ ஃபோனை இன்று இந்தியாவில் அறிமுகம்செய்துள்ளது. இதன் விலை ரூ.28,990 எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக செல்ஃபி கேம்ரா 32 மெகா பிக்ஸலில் பாப் அப் வசதியுடன் அறிமுக செய்துள்ளது.

 

vivo

 

மேலும் பின்புறம் மூன்று கேம்ராக்களை கொண்டுள்ளதாகவும், அது 48 மெகா பிக்ஸலில் இருந்து படிப்படியாக மற்ற இரு கேம்ராக்களும் குறைவதாகவும் தெரிவித்துள்ளது. 128ஜி.பி முதல் 256ஜி.பி வரை  ஸ்டோரேஜ் வசதி கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

vivo

 

ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசானில் இன்று முதல் இந்த ஃபோன் விற்பனைக்கு வருவதாகவும், மார்ச் 6-ம் தேதி முதல் கடைகளில் விற்பனைக்குவரும் எனவும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெளியேறிய விவோ - ஐபிஎல் தொடரில் கால் பதிக்கும் டாடா!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

IPL

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் தொடர், உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தநிலையில் விவோ நிறுவனம், 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலுமான ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சருக்கான உரிமையை 2200 கோடிக்கு வாங்கியது. அதனைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக விவோ இருந்து வந்த நிலையில், இந்திய - சீன வீரர்களுக்கிடையே எல்லையில் நடந்த மோதல் காரணமாக, 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விவோவுக்கு பதிலாக ட்ரீம் 11 ஐபிஎல் தொடருக்கு டைட்டில் ஸ்பான்சராக இருந்தது.

 

இதன்பின்னர் கடந்த வருடம் ஐபிஎல் தொடருக்கு விவோ மீண்டும் டைட்டில் ஸ்பான்சர் செய்தது. இந்தநிலையில் விவோ நிறுவனம்,  தனது  டைட்டில் ஸ்பான்சர் உரிமை வேறு நிறுவனத்திற்கு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில் விவோ நிறுவனம் ஐபிஎல்  டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகியுள்ளது.

 

இதனையடுத்து டாடா குழுமம், ஐபிஎல் தொடருக்கு  டைட்டில் ஸ்பான்சர் செய்யவுள்ளது. இன்று நடைபெற்ற பிசிசிஐயின் ஆட்சி குழு கூட்டத்திற்கு பிறகு ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். டாடா குழுமம் 2023 ஆம் ஆண்டு வரை  டைட்டில் ஸ்பான்சராக இருக்கவுள்ளது. எனவே அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடர் டாடா ஐபிஎல் என அழைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

Next Story

"ஐ.பி.எல். தொடருக்கு விவோ ஸ்பான்சர் செய்வது நமக்குத்தான் சாதகம்" - பி.சி.சி.ஐ. பொருளாளர் புதிய விளக்கம்...

Published on 19/06/2020 | Edited on 19/06/2020

 

bcci about vivo sponsorship in ipl

 

ஐபிஎல் தொடரில் சீன நிறுவனமான விவோ -வை  ஸ்பான்சராக தொடர்வது குறித்து பி.சி.சி.ஐ. விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. 

 

இந்திய, சீன எல்லையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சீனாவுக்கு எதிரான கருத்துகள் இந்தியாவில் அதிக அளவில் எழுந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாகச் சீனப் பொருட்களைப் பயன்படுத்துவதை இந்தியர்கள் தவிர்க்கவேண்டும் எனவும், சீனப் பொருட்களின் இறக்குமதிக்குத் தடைவிதிக்க வேண்டும் எனவும் சமூகவலைத்தளங்களில் கருத்துகள் எழுந்து வருகின்றன. இந்தச் சூழலில், ஐ.பி.எல். தொடரில் சீன நிறுவனமான விவோ -வை  ஸ்பான்சராக தொடர்வது குறித்து பி.சி.சி.ஐ. விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

 

விவோ ஸ்பான்சர்ஷிப் குறித்துப் பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பி.சி.சி.ஐ. பொருளாளர் அருண் துமால், "இதுபற்றி இன்னும் எதுவும் தீர்மானிக்கப்படவில்லை. சீன நிறுவனங்களுக்கு உதவுதலுக்கும், சீன நிறுவனத்திடமிருந்து பயன்பெறுவதற்கும் வித்தியாசம் உள்ளது. அதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய நுகர்வோரிடமிருந்து சீன நிறுவனம் பணம் சம்பாதிக்கிறது, பின்னர் அதில் ஒரு பங்கை பி.சி.சி.ஐ.-க்கு ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப் செய்வதற்காகச் செலுத்துகிறது. அவர்களிடமிருந்து பெறும் பணத்திற்கு பி.சி.சி.ஐ. 42% வரி செலுத்துகிறது. எனவே இது நம் நாட்டுக்குச் சாதகமானதுதானே தவிரச் சீனாவுக்குச் சாதகமானதல்ல" எனத் தெரிவித்துள்ளார்.