Advertisment

நான் என்ன தவறு செய்தேன்? - விவேக் ஓபராய் சர்ச்சை

17வது மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கெண்ணிக்கை வருகிற 23ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பல செய்தி நிறுவனங்கள் தங்களின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை வெளியிட்டனர். அந்த தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. இது தொடர்பாக பலரும் தங்களின் கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

Advertisment

vivek

நடிகர் விவேக் ஓபராய் சர்ச்சையான கருத்து ஒன்றை பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அவர் பதிவிட்டுள்ள மீமில் ஐஸ்வர்யா ராயை அவமானப்படுத்தும் விதமாக இருக்கிறது.

இதற்கு விளக்கம் கேட்டு விவேக் ஓபராய்க்கு தேசிய பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisment

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள விவேக், “மக்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கேட்கிறார்கள். மன்னிப்பு கேட்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் நான் என்ன தவறு செய்தேன் என்று கூறுங்கள் நான் மன்னிப்பு கேட்கிறேன். நான் ஏதும் தவறாக செய்துவிட்டதாக நினைக்கவில்லை. அதில் என்ன தவறு இருக்கிறது. யாரோ அந்த மீமை உருவாக்கியிருந்தார்கள். அதற்கு நான் சிரித்தேன். அவ்வளவுதான்” என்று பேட்டியளித்துள்ளார்.

exitpoll vivek oberoi
இதையும் படியுங்கள்
Subscribe