Published on 20/05/2019 | Edited on 20/05/2019
17வது மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கெண்ணிக்கை வருகிற 23ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பல செய்தி நிறுவனங்கள் தங்களின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை வெளியிட்டனர். அந்த தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. இது தொடர்பாக பலரும் தங்களின் கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

நடிகர் விவேக் ஓபராய் சர்ச்சையான கருத்து ஒன்றை பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அவர் பதிவிட்டுள்ள மீமில் ஐஸ்வர்யா ராயை அவமானப்படுத்தும் விதமாக இருக்கிறது.
இந்நிலையில் இதற்கு விளக்கம் கேட்டு விவேக் ஓபராய்க்கு தேசிய பெண்கள் ஆணையம் நோட்டீஸ்.