Skip to main content

நார்வே செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் தொடர்ந்து ஆதிக்கம்!

Published on 06/06/2022 | Edited on 06/06/2022

Viswanathan Anand continues to dominate Norway chess tournament!

நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்தார். 

பிலிக்ஸ் முறையில் நடந்த போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை  வீழ்த்தியிருந்த முன்னாள் உலக செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், கிளாசிக் பிரிவிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். ஐந்தாவது சுற்றுப்போட்டியில் மீண்டும் கார்லசனை எதிர்கொண்டார். இதில் ஆனந்த் 1.5 புள்ளியும், கார்ல்சன் ஒரு புள்ளியும் பெற்றனர். 

ஐந்து சுற்றுகளின் முடிவில் விஸ்வநாதன் ஆனந்த் 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். நார்வேயின் கார்ல்சன் 9.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Greetings from CM MK Stalin to chess player Gukesh

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. 

Greetings from CM MK Stalin to chess player Gukesh

இந்நிலையில் செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

இளம் வயதில் சாதனை படைத்த செஸ் வீரர் குகேஷ்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Chess player Gukesh who set a record at a young age

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று தமிழ்நாடு கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாதனை படைத்துள்ளார்.