சுசாந்தா நந்தா என்ற இந்திய வனத்துறை அதிகாரி தனது டுவிட்டர் பக்கத்தில் அடிக்கடி சுவாரசியமான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், அவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. அதில் சிங்கம் ஒன்று காட்டில் அமைதியாக படுத்திருந்த புலி மீது பாய்ந்து அதை சீண்டியுள்ளது. இதை எதிர்பாராத அந்த புலி திரும்பி தனது கால்களால் சிங்கத்தை எட்டி உதைத்துள்ளது.

Advertisment
Advertisment

இதில் நிலைதடுமாறிய சிங்கம் புலியின் பலத்தை உணர்ந்து மேலும் சேட்டை செய்யாமல் வேறு இடத்திற்கு சென்றது.இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. காட்டிற்கே சிங்கம் ராஜாவாக இருந்தாலும் புலி தான் சிங்கத்திற்கே ராஜா என்று நெட்டிசன்கள் இணையதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் அதிகம் பரப்பப்படுகின்றது.