போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் ஜலால்பூர் பகுதியில்அம்பேத்கர் சிலை ஒன்று சேதப்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து பெண்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது திடீரென அந்த இடத்தில் தகராறு ஏற்பட்ட நிலையில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களைக் கலைக்க முயன்றனர். அப்போது போலீசார் வாகனங்கள் மீது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து போலீசார் சரமாரியாகப் பெண்களைத்தாக்கினர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது. இது தொடர்பானவீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/O6W2bBDPvAE.jpg?itok=pjFdqx7A","video_url":" Video (Responsive, autoplaying)."]}