கேரளா மாநிலத்தில் சாலை பகுதியில் தவறான வழியில் சென்ற பேருந்தை இளம்பெண் ஒருவர் தடுத்து நிறுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவின் பெரும்பாவூர் பகுதியில் சாலையில் போடப்பட்டிருந்த கோடுகளை கடந்து, எதிர் திசையில் வாகனம் வரும் பாதையில் அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இதனைப் பார்த்த பெண் இருவர் தனது இருசக்கர வாகனத்தை பேருந்திற்கு முன்னாள் நிறுத்தி பேருந்திற்கு வழிவிடாமல் இருந்தார். இதனையடுத்து பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை கோட்டை தாண்டி சரியான பாதைக்கு திருப்பி மீண்டும் சென்றார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த வீடியோவில் இருக்கும் பெண்ணிற்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.