Advertisment

ஓடும் ரயிலில் டிக் டாக் - ரயில்வே அமைச்சர் வரை சென்ற வீடியோ!

ஓடும் ரயிலில் டிக்டாக் செய்த இளைஞர் ரயிலில் இருந்து கீழே விழப்போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 7 வினாடி மட்டும் ஓடும் டிக்டாக் வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் ரயில் படிக்கட்டுக்களில் தொங்கியப்படி பயணிக்கும் இளைஞர் ஒருவர், திடீரென பக்கவாட்டு பகுதியில் தவறிவிழப் போனார். அப்போது எதிர்பாராத விதமாக கம்பியை பிடித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Advertisment

இந்த வீடியோவை வெளியிட்டுள்ள ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் ஓடும் ரயிலில் சாகசம் செய்வது வீரமல்ல, அது முட்டாள்தனமானது என்று குறிப்பிட்டு இந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.

Train
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe