Advertisment

வைரலாகும் புகைப்படம்... நன்றி தெரிவித்த பக்ரு!

Viral photo... actor fakru thanked!

சமீப காலமாகவே மெழுகு சிலை வடிவமைப்பு என்பது அனைவராலும் ஈர்க்கப்பட்டு வருகிறது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ''மேடம் துசாட்ஸ்'' என்ற நிறுவனம் மெழுகு சிலைகளை தத்ரூபமாக வடிவமைப்பதில் கைதேர்ந்த நிறுவனம். இப்படி இருக்க தற்போது உள்ளூரிலும் மெழுகு சிலை வடிவமைப்பில் அசத்தி வருகின்றனர். சமீபத்தில் திருமண நிகழ்வுகளில் மறைந்த பெற்றோர்களை, முன்னோர்களை தத்ரூப மெழுகு சிலையாக வடிவமைத்து மேடையில் அமரவைத்து சிலை முன் திருமணம் செய்துகொள்ளும் நெகிழ்ச்சி நிகழ்வுகள் தொடர்பான செய்திகள் வெளியாகி வந்தன.

Advertisment

இந்நிலையில் மலையான காமெடி நடிகர் பக்ருவிற்கு கோட்டயத்தில் அவரை போன்றே உருவாக்கப்பட்ட மெழுகு சிலையைக் கண்டு அசந்துபோனார் நடிகர் பக்ரு. ஹரிகுமார் என்ற சிற்பி வடிவமைத்த அந்த சிலையை திறந்து வைத்த பக்ரு சிற்பிக்கும் நன்றி தெரிவித்தார். தற்பொழுது மெழுகு சிலை அருகே நடிகர் பக்ரு நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

Kerala cinema
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe