Violence again in Manipur

மணிப்பூரில் மீண்டும் வன்முறை அரங்கேறி வரும் நிலையில் அம்மாநில முதல்வர் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

மணிப்பூரில் ஜெரிபாம் மாவட்டத்தில் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஆறு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பல இடங்களில் மீண்டும் வன்முறைகள் வெடித்திருக்கிறது. இதனால் அம்மாநில முதல்வர் பிரேன் சிங் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் குறிவைத்து தாக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. முன்னதாகவே மணிப்பூர் மாநிலத்தில் ஆங்காங்கே இணையதள சேவைகள் முடக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் வன்முறை சம்பவம் காரணமாக பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இம்பால் மேற்கு, கிழக்கு, பிஷ்ணுபூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மெய்தி குக்கி இன மக்களிடையே வன்முறைகள் வெடித்து வருவது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment