Vinesh Phogat joins Congress

Advertisment

ஹரியானாவில் சட்டப்பேரவை தேர்தல் வரும் செப். 5 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஒலிம்பிக் மல்யுத்த வீரர் வினேஷ் போகட் காங்கிரசில் இன்று இணை இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அண்மையில் ஒலிம்பிக் மல்யுத்த வீரர் வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியை சந்தித்திருந்த புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் ஒரு வினேஷ் போகட் காங்கிரசில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் நடைபெறும் விழாவில் அவர் கட்சியில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேநேரம் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் வினேஷ் போகட் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்புகளும்இன்று மாலைக்குள் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.