Skip to main content

காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நூதன தண்டனை கொடுத்த கிராம மக்கள்!!

Published on 22/09/2021 | Edited on 22/09/2021

 

jl

 

மத்தியப் பிரதேசத்தில் காதல் திருமணம் செய்த ஜோடியைக் கிராம மக்கள் கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் குந்தி கிராமத்தில் வீட்டிற்குத் தெரியாமல் இளம் ஜோடி ஒன்று சில நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர். வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையிலும் அதையும் மீறி இருவரும் திருமணம் செய்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த அந்த கிராம மக்கள் அவர்களைத் தீவிரமாகத் தேடியுள்ளனர்.

 

அவர்களின் தோழியுடன் அவர்கள் இருவரும் தொலைப்பேசியில் பேசியுள்ளதைக் கண்டுபிடித்த கிராம மக்கள் அவர்களைக் கண்டுபிடித்து கிராமத்திற்கு அழைத்து வந்துள்ளனர். தாங்கள் எவ்வளவு சொல்லியும் எதற்காகத் திருமணம் செய்தீர்கள், உங்களுக்கு அவ்வளவு துணிச்சல் வந்துவிட்டதா? என்று ஊர்பெரியவர்கள் சிலர் அவர்களிடம் ஆவேசமாகப் பேசியுள்ளனர். அப்போது சிலர் அவர்களின் தலையில் கார் டயர்களை மாட்டி நடனம் ஆடச் சொல்லியுள்ளனர். அவர்களும் மிரட்டலுக்குப் பணிந்து டயருடன் நடனமாடியுள்ளனர். இந்த சம்பவம் வைரலான நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

திருமணம் செய்துகொண்ட காதல்ஜோடி; பெண் வீட்டார் எதிர்ப்பு

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
girl relatives protest against the couple who got married for love

சிதம்பரம் பகுதியை சேர்ந்த இளைஞர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கடையில் வேலை செய்துவந்துள்ளார். அங்கு அதே கடையில் வேலை செய்த இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண்ணுக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் மேஜர் என்பதால் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வந்து திருமனம் செய்து கொண்டு சிதம்பரம் பகுதிக்கு வந்துள்ளனர்.

இந்தநிலையில் பெண்ணின் பெற்றோர் கோயம்புத்தூர் காவல் நிலையத்தில் மகளை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார்கள். பெற்றோர்கள் தேடியபோது மகள் சிதம்பரம் பகுதியில் உள்ளார் என தெரியவர சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்திற்கு வந்து மகளை மீட்டுக் கொடுங்கள் என்று கூறியுள்ளனர். இரவு 11 மணிக்கு ஒரு பெண்ணை காவல்நிலையத்திற்கு அழைக்கமுடியாது. மேலும் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாது அவரது வழக்கறிஞர் தான் எங்களிடம் பேசினார். அவரது எண்ணும் தற்போது அணைத்து வைக்கப்பட்டுள்ளது என  காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் மகளை பார்க்க ஏற்பாடு செய்யுங்கள் என்று அவரது பெற்றோர்கள் கூறினர். அதற்கு சிதம்பரம் ஏஎஸ்பி இரவு நேரம் என்பதால் காலையில் வாருங்கள். அவர்களை வக்கீல் மூலம் அழைத்து பேசவைக்கிறேன் என்று உறுதி அளித்தனர். இதற்குள் சிதம்பரம் சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் காவல்நிலையம் முன்பு ஒன்றுகூடி பெண்ணை பெற்றோர்கள் பார்க்க ஏற்பாடு செய்யவேண்டும் என காவல்துறையை கண்டித்து கோஷங்களை எழுப்பி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

girl relatives protest against the couple who got married for love

இதனால் காவல் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் போக்குவரத்தை சரிசெய்து வேறுவழியில் அனுப்பினர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கஞ்சிதொட்டி பேருந்து நிறுத்தத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைதியாக பேசியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் சம்பந்தபட்ட பெண்ணை சிதம்பரம் ஏஎஸ்பி தொலைபேசி வாயிலாக அவரது அப்பாவிடம் பேச வைத்தார். 5 நிமிடம் பேசியபிறகு அந்த பெண் பெற்றோர்களை பார்க்கமுடியாது என்று கூறியுள்ளார். இதனையறிந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து இஸ்லாமியர்களையும் கலைந்துபோக செய்தனர். சம்பவத்தை அறிந்த கடலூர் மாவட்ட எஸ்பி ராஜராம் சிதம்பரத்திற்கு வந்து கூட்டமாக இருந்தவர்களை உடனடியாக கலைந்துபோக செய்தார். இரவு நேரத்தில் இஸ்லாமிய சமூகத்தினரின் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.