Skip to main content

மாந்திரீகத்தில் ஈடுபட்ட 2 பெண்கள்; அடித்தே கொன்ற கிராமத்தினரால் பரபரப்பு!

Published on 14/09/2024 | Edited on 14/09/2024
Villagers incident 2 women engaged in witchcraft

மேற்கு வங்க மாநிலம், பீர்பம் மாவட்டம் ஹரிசாரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் லோக்கி கிஷு மற்றும் டோலி சோரன் என்ற இளம்பெண்கள். இவர்கள் இருவரும் மாந்திரீகத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, நேற்று இரவு வீட்டில் இருந்த இருவரையும் கிராமத்தினர் வீட்டில் இருந்து வெளியே வரவழைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும், உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் அருகில் உள்ள கால்வாய்க்குள் வீசிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், கொல்லப்பட்ட இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய 15 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாந்திரீகம் ஈடுபட்டதாக இரண்டு பெண்களை, கிராமத்தினர் அடித்தே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.