vv

Advertisment

2019-20-ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில் 2006-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு இந்த ஆண்டில் ரூ. 60 ஆயிரம் கோடியென மத்திய அரசால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2005-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் எனும் நூறு நாள் வேலை திட்டம் கிராமப்புற ஏழை மக்களுக்கான நூறு நாளுக்கான வேலையை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்டது. அப்போது இதற்காக ரூ. 37,588 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்பின் வருடாவருடம் குறிப்பிட்ட தொகையை மத்திய அரசு உயர்த்தி வந்தது. அதன்படி கடந்தவருடம் இதற்காக ரூ. 55 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது இத்திட்டத்திற்கு ரூ. ஐந்து கோடி அதிகரித்து ரூ. 60 ஆயிரம் கோடியென மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.