மக்களவை தேர்தலுக்கான நேற்றைய இறுதி கட்ட வாக்குப்பதிவில் ஒரு கிராமத்தில் 143 சதவீதம் வாக்குகள் பதிவான சம்பவம் நடந்துள்ளது.

இமாசல பிரதேசத்தில் உள்ள தாஷிகேங் என்ற இமயமலை கிராமத்தில் வாக்குச்சாவடி மையமானது கடல்மட்டத்தில் இருந்து 15 ஆயிரத்து 256 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது.
இந்த தாஷிகேங் வாக்குச்சாவடியில் தான் இந்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. உலகின் மிக உயரத்தில் அமைக்கப்பட்ட வாக்குசாவடியான இதில் மொத்தம் 49 வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் அந்த வாக்கு சாவடியில் பணிபுரிந்த தேர்தல் அதிகாரிகள் உலகின் உயரமான வாக்குப்பதிவு மையத்தில் வாக்களிக்க வேண்டும் என விரும்பி அரசிடம் அனுமதி கேட்டுள்ளனர்.
இதற்கு அரசு அனுமதியளித்ததை அடுத்து 34 அதிகாரிகளும் அந்த மையத்திலேயே வாக்களித்தனர். எனவே 49 வாக்குகள் மட்டுமே உள்ள அந்த மையத்தில் 73 வாக்குகள் பதிவாகின. இதனால் 143 சதவீதம் வாக்குகள் அந்த மையத்தில் பதிவாகியுள்ளது.