Advertisment

''மீண்டும் உயிர் பெற்று வா ராசா...'' உப்பை கொட்டிய பெற்றோர்-உறைந்த கிராம மக்கள்!

A village frozen in shock by a parent's heroic act to revive a boy

Advertisment

உயிரிழந்த சிறுவனை மீட்டெழ வைப்பதாக உப்பு குவியலுக்குள் 8 மணி நேரம் சிறுவன் உடலை புதைத்த நூதன சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ளது சிறவாரா எனும் குக்கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வந்த சேகர்-ரங்கம்மா என்றதம்பதியரின் 12 வயது மகன் பாஸ்கர். நேற்று வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த பொழுது பாஸ்கர் வீட்டுக்கு அருகிலிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்து விட்டான். இந்நிலையில் உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்ட பெற்றோர் முகநூலில் என்றோ படித்த பதிவை உண்மை என நினைத்து அதனைச் செய்துள்ளனர். அதாவது தண்ணீரில் விழுந்து உயிரிழந்தவரின் மீது உப்பைக் கொட்டினால் இரண்டு மணி நேரத்தில் பிழைத்துக் கொள்வார் என்ற பதிவினை படித்ததை நினைவில் வைத்திருந்த பெற்றோர் அதன்படி 8 கிலோ உப்பை வாங்கி வந்து பாஸ்கரின் சடலத்தின் மீது கொட்டி உள்ளனர். உயிரிழந்த மகன் உயிர் பிழைத்து மீண்டும் வந்து விடுவான் என எட்டு மணி நேரம் காத்திருந்த பெற்றோருக்கு தோல்வியே கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பாஸ்கர் மீது கொட்டப்பட்டிருந்த உப்புக் குவியல் அகற்றப்பட்டு பின்னர் சிறுவனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. சிறுவனின் மீது உப்பு குவியல் கொட்டி கிடக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

incident karnataka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe