Advertisment

"சீனா கிராமம் அமைத்துள்ளது அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில்தான்" - பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் விளக்கம்!

INDIA CHINA

அமெரிக்க இராணுவ தலைமையகமானபென்டகன், சீன இராணுவம்மீதான ஆண்டு அறிக்கையை அண்மையில் அமெரிக்க காங்கிரஸில்சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்திற்கும், சீனாவின் திபெத் தன்னாட்சி பகுதிக்கும் இடையேயான பிரச்சனைக்குரிய பகுதியில் 100 வீடுகளைக் கொண்ட கிராமத்தை சீனா உருவாக்கியுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

Advertisment

இந்தநிலையில் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள், சீனா கிராமத்தை அமைத்துள்ள இந்தியாவிற்கு சொந்தமான பகுதி, பல ஆண்டுகளாக சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது என கூறியுள்ளன.

Advertisment

இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் கூறியுள்ளதாவது,“சுபன்சிரி மாவட்டத்தில் சர்ச்சைக்குரிய எல்லை பகுதியில் அமைந்துள்ள கிராமம் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக அவர்கள் அந்தப் பிராந்தியத்தில் இராணுவசாவடியைஅமைத்துள்ளனர். சீனா மேற்கொண்ட பல்வேறு கட்டுமானங்கள் குறுகிய காலத்தில் கட்டப்பட்டவை அல்ல.

சீனா தற்போது கிராமத்தை அமைத்துள்ளபகுதியை சீனஇராணுவம், 1959ஆம் ஆண்டு, லாங்ஜு சம்பவம் என்ற நடவடிக்கையில் அசாம் ரைபிள்ஸ் பிரிவின் எல்லை சாவடியை முறியடித்து கைப்பற்றியது.” இவ்வாறு அந்த பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

1959ஆம் ஆண்டுவரைலாங்ஜுபகுதியில் இந்தியா எல்லைச் சாவடியை அமைத்திருந்தது. ஆனால் திபெத்தை உரிமை கொண்டாடும் சீனா, லாங்ஜு பகுதி திபெத்தின்மிகைதுன் பகுதியின் அங்கம் என கூறியதுடன்,லாங்ஜு பகுதியில்அசாம் ரைபிள்ஸ் பிரிவினர் அமைத்திருந்த எல்லைச் சாவடி மீது தாக்குதல் நடத்தி அப்பகுதியைக் கைப்பற்றியது. அதிலிருந்துலாங்ஜுபகுதி சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது.

America Arunachal Pradesh china India
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe