Skip to main content

விலாடிமிர் புதின் இந்தியா வருகை...

Published on 28/09/2018 | Edited on 28/09/2018
putin


19ஆவது இந்தியா ரஷ்யா இடையேயான உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் இந்தியா வருகிறார். அக்டோபர் மாதம் 4-5 ஆம் தேதி என்று இருநாள் சுற்று பயணமாக இந்தியாவுக்கு வருபவர். இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியையும், குடியரசுத் தலைவரயும் சந்தித்து பேச இருக்கிறார். 

சார்ந்த செய்திகள்

Next Story

முக்கிய தலைவரைக் கொன்ற புதின்? நெருக்கடியில் ரஷ்யா!

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
US President Joe Biden said that Putin responsible for Navalny passed away

ரஷ்யாவில் அதிபர் புதின் அரசின் மீது எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தார். 47 வயதாகும் அலெக்ஸி நவல்னி எதிர்கால ரஷ்யா என்ற புதிய கட்சியை தொடங்கி புதினைத் தொடர்ந்து விமர்சனம் செய்தும், ரஷ்ய மாகாணங்களில் நடைபெறும் ஊழல் குறித்தும் தன்னுடைய இணையப் பக்கத்தில் எழுதி வந்தார். இதனால் ரஷ்ய மக்களிடையே பிரபலமானார். கடந்த அதிபர் தேர்தலில் புதினுக்கு எதிராக அலெக்ஸி நவல்னி போட்டியிட முடிவு செய்திருந்தார். ஆனால் புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் தேர்தலின் போது புதினுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். 

இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும் போது அலெக்ஸி நவல்னி மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அலெக்ஸி நவல்னிக்கு விஷம் வைக்கப்பட்டிருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதனை ஜெர்மனி அரசு உறுதி செய்ததோடு, விஷம் வைக்கப்பட்டதில் ரஷ்ய அரசுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக ரஷ்ய அரசு மறுத்தது. 

இதனைத் தொடர்ந்து 5 மாத சிகிச்சைக்குப் பிறகு ரஷ்யா திரும்பிய அலெக்ஸி நவல்னி, அறக்கட்டளை மூலமாக பணத்தை கையாடல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அலெக்ஸி நவல்னிக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கி அவற்றிற்கு நிதியுதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு மேலும் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரஷ்யாவில் உள்ள ஆர்க்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அலெக்ஸி நவல்னி உயிரிழந்துள்ளார். சமீப காலமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் நடைபயிற்சி மேற்கொண்ட போது மயங்கி விழுந்து சிறையிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை அவரது இறப்பிற்கான காரணம் வெளியிடப்படவில்லை. அலெக்ஸி நவல்னியின் மனைவி, புதின் தான் தனது கணவர் இறப்பிற்கு பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் அலெக்ஸி நவல்னியின் மரணத்திற்கு நீதிகேட்டு பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “ரஷ்ய அதிபர் புதின் திட்டமிட்டு கொலை செய்துவிட்டார். இது ரஷ்ய அரசின் எதேச்சதிகாரப் போக்கு” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

US President Joe Biden said that Putin responsible for Navalny passed away

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “அலெக்ஸி நவல்னியின் மரணம் குறித்து நான் உண்மையில் ஆச்சரியம் அடையவில்லை. புதின் அரசாங்கம் செய்யும் ஊழல் மற்றும் அனைத்து மோசமான செயல்களையும் அவர் தைரியமாக எதிர்த்தார். பதிலுக்கு, புதின் அவருக்கு விஷம் கொடுத்தார், அவரைக் கைது செய்தார். புதினால் இட்டுக்கட்டப்பட்ட குற்றங்களுக்காக நவல்னியின் மீது வழக்கு தொடர்ந்தார். தனிமைப்படுத்தப்பட்ட அவரைச் சிறையில் அடைத்தார்.  அலெக்ஸி நவல்னியின் மரணத்திற்கு புதின் தான் பொறுப்பு” என தெரிவித்துள்ளார். அலெக்ஸியின் மரணம் தற்போது புதினின் ரஷ்ய அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

2024ல் கொல்லப்படப்போகும் உலகத் தலைவர்; நடக்கப்போகும் பேரழிவுகள் - பாபா வங்காவின் கணிப்பு

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
Baba Vanga predicted the disasters that will occur in 2024

பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர் மூதாட்டி பாபா வங்கா. இவருக்கு 12 வயது இருக்கும்போது பல்கேரியாவில் பெரும் புயல் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அப்போது, பாபா வங்காவின் கண்களில் மின்னல் தாக்கி அவருக்குப் பார்வை பறிபோனது. அப்போதிலிருந்து, பாபா வங்காவிற்கு எதிர்காலத்தில் நடக்கக்கூடிய காட்சிகள் மனதில் வருவதாக அவர் கூறியிருக்கிறார். மேலும், எதிர்காலத்தில் எந்த வருடத்தில் என்ன நடக்கும் என்பது இவருக்கு தினமும் காட்சிகளாக வந்துள்ளதாம். இதைத்தான் இவர் கணிப்புகளாக எழுதி வைத்துள்ளார். இதனை, கடவுள் தனக்கு கொடுத்த சக்தியாக கருதியிருக்கிறார். பாபா வங்கா, கடந்த 1996 ஆம் ஆண்டிலேயே இறந்துவிட்டார். ஆனாலும் இவர் உலகைப் பற்றி கணித்து எழுதி வைத்திருந்ததெல்லாம் நடப்பதாகச் சொல்லப்படுகிறது. 

இவ்வாறு உலகத்தின் எதிர்காலத்தைப் பற்றி கணித்து எழுதி வைத்திருக்கும் இவர், வருகிற 5079ம் ஆண்டு உலகம் அழியும் எனவும், அதுவரையிலான கணிப்புகளை இவர் எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார். இவர், இதுவரை நடந்த உலகின் பல முக்கிய நிகழ்வுகளை மிகத் துல்லியமாக கணித்ததாகச் சொல்லப்படுகிறது. இதில் கடந்த 2001 ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி, அல்கொய்தா அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தில் தாக்குதல் நடத்தியதை இவர் துல்லியமாக கணித்திருக்கிறார். அதேபோல் இளவரசி டயானா மரணம், தாய்லாந்தில் ஏற்பட்ட 2004 சுனாமி, ஜப்பான் சுனாமி, அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்றது, சோவியத் யூனியன் உடைந்தது என்று பல விஷயங்களை இவர் துல்லியமாக கணித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இவ்வாறு ஏராளமான சம்பவங்களை கணித்திருக்கும் பாபா வங்கா, 2024லும் என்னென்ன நடக்கும் என்றும் தனது கணிப்பு குறிப்புகளில் எழுதி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவரின் கணிப்பின்படி, 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் வெப்பநிலை 50 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் எனவும், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வெப்பநிலை காரணமாக அதிக அளவில் வெட்டுக் கிளிகள் வந்து விவசாய பயிர்களை தாக்குதல் நடத்தும் எனவும், இதனால் பயிர்கள் மொத்தமாக சேதம் அடைந்து மக்கள் பஞ்சத்தால் அழியப் போகிறார்கள் என்றும் இவர் கணித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், சொந்த நாட்டுக்காரரின் கையால் ஒரு பெரிய ரஷ்ய தலைவர் கொலை செய்யப்படுவார் எனவும், அவரின் கொலை உலகத்தை நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளிவிடும் என்றும் கணித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவர் இவ்வாறு குறிப்பிட்டிருப்பது ரஷ்ய அதிபர் புடினைப் பற்றித்தான் என்கின்றனர்.

மேலும், 2024 ஆம் ஆண்டில் பெயரிடப்படாத ஒரு பெரிய நாடு உயிரியல் ஆயுதத் தாக்குதல்களை உருவாக்கும் எனவும் கணித்திருந்ததாகவும் கூறுகின்றனர். இந்தத் தாக்குதல் நடக்கும் அதே வேளையில், ஐரோப்பா முழுவதும் வேறு விதமான பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்கும் என்றுள்ளார். மேலும், 2024இல் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளப் போகிறோம் எனவும், இதனால் கடன் அளவு அதிகரிக்கக்கூடும் எனவும் கணித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் உலகப் பொருளாதாரத்தை குழப்பத்தில் ஆழ்த்தும் அபாயம் இருப்பதாக கணித்திருக்கும் அவர், புற்றுநோய் மற்றும் அல்சைமர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்களுக்கு புதிய சிகிச்சைகள் உருவாகும் எனவும், ஆனால் அதே சமயம் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய போர் ஒன்று நடக்கும் எனவும், அதே வருடம் பொதுமக்கள் ஏலியன்களை காண்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு அவரின் கணிப்புகள் குறித்துப் பல்வேறு விதமான தகவல் கிடைக்கும் வேளையில், அவர் கணிப்பின்படி ஏராளமான சம்பவங்கள் நடந்திருக்கிறது. அதில் முக்கியமாக இரண்டைக் கூறலாம். ஒன்று, ஜப்பானில் புத்தாண்டு தினத்தில் சுனாமி ஏற்பட்டுள்ளது.

ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்பின் சிறிய அளவிலான சுனாமி ஏற்பட்டது. அதேபோல் அமெரிக்காவில் ப்ளோரிடாவில் உள்ள மியாமியில் இருக்கும் மால் ஒன்றில் ஏலியன்கள் இறங்கியதாக வெளியாகும் செய்திகள் இணையத்தை உலுக்கி வருகின்றன. 10 அடி உயரமுள்ள வேற்றுக் கிரக ஏலியன் ஒன்று மியாமி ஷாப்பிங் மாலில் சுற்றித் திரிந்ததாகத் தகவல்கள் வந்ததால், அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவம் உலக நாடுகளை மிரட்டியுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், பேசைட் மார்க்கெட்பிளேஸுக்கு வெளியே ஒரு பெரிய உருவம் உலா வருவதைக் காண முடிகிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து அங்கே போலீசார் அதிரடியாக குவிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான போலீஸ் அதிகாரிகளால் சூழப்பட்ட அந்த மாலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், அந்த மாலுக்கு மேலே ஏலியனின் வாகனங்கள் என்று சொல்லப்படும் யுஎஃப்ஓ போன்ற பறக்கும் தட்டுகளின் வெளிச்சங்கள் தென்பட்டதும் வீடியோவாக வெளியாகி உள்ளது. வீடியோ வைரலானவுடன் ஏலியன்கள் தொடர்பான விஷயங்கள் ஊடகங்களிலும் இணையத்திலும் பேசப்பட்டு வருகிறது.