Advertisment

நாளையுடன் முடிகிறது விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம்!

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து கடந்த ஜூலை 22 ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டசந்திரயான்-2 விண்கலம் மேற்கொண்ட 47 நாட்கள் பயணத்திற்கு பிறகு சுமார் 3 லட்சத்து 80 ஆயிரம் கிலோமீட்டர்களை கடந்து கடந்த செப் 7 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க இஸ்ரோவால் முயற்சி செய்யப்பட்டது. எனினும் நிலவில் 2.1 கிலோமீட்டர் தொலைவில் தகவல் தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரை இஸ்ரோ தற்போதுவரை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறது. சந்திரயான்-2 வின் இன்னோரு பகுதியான ஆர்பிட்டர் ( நிலவின் சுற்றுவட்ட பாதையில் ஆய்வு செய்யும் கருவி) மூலமும் லேண்டரை தொடர்புகொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது வரை தொடர்பு கொள்ளமுடியாத நிலையே இருந்து வருகிறது.

Advertisment

 Vikram Lander's lifespan ends tomorrow

அதற்கு அடுத்தகட்டமாக நாசாவின் உதவியுடன் லேண்டரை தொடர்புகொள்ள முயற்சித்தும் இதுவரை லேண்டரை தொடர்புகொள்ள முடிவில்லை. ஏற்கனவேவிக்ரம் லெண்டரின் ஆயுட்காலம் 14 நாட்கள்தான்என இஸ்ரோ தெரிவித்திருந்த நிலையில் நாளையுடன் விக்ரம் லேண்டரின் ஆயுள்காலம் முடிவடைகிறது. நிலவு தொடர்பான ஆராய்ச்சியில் ஒருவேளை விக்ரம் லேண்டரை நாம் இழந்தாலும் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆராய்ச்சி செய்யும்ஆர்பிட்டர் எனும் கருவியின் எரிகலத்தை பயன்படுத்தி ஆர்பிட்டரை 7.5 ஆண்டுகள்வரைசெயல்பட வைக்கலாம் எனவும் இஸ்ரோ தெரிவிதித்துள்ளது மகிழ்ச்சிக்குரியதே.

Advertisment

moon chandrayan 2 Shivan ISRO
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe