ADVERTISEMENT

ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு உணவு பொருட்களை வழங்கிய பிரபல சமையல் கலைஞர்...

05:13 PM May 14, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவின் பிரபலமான சமையல் கலைஞரான விகாஸ் கண்ணா, ஊரடங்கால் உணவுக்கு கஷ்டப்படும் ஆயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு பொருட்களை வழங்கியுள்ளார்.


பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விகாஸ் கண்ணா, இந்திய தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான சமையல் கலைஞர் ஆவார். தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் இவர், ஊரடங்கு காரணமாக இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் உணவுக்கு வழியின்றி தவித்து வருவதை ஊடகங்கள் மூலமாகவும், நண்பர்கள் மூலமாகவும் அறிந்துள்ளார். எனவே, உணவு தேவைப்படும் மக்களுக்கு உதவிசெய்ய முடிவெடுத்த விகாஸ், உடனடியாக தனது நண்பர்கள் மூலமாக அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படை தலைவர் சத்ய நாராயணனை தொடர்புகொண்டு, மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்குவதற்கான அனுமதியையும் பெற்றுள்ளார்.


அதன்படி, விகாஸ் கண்ணாவின் உதவியுடன் நாடு முழுவதும் 79 நகரங்களில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்கள், தொழுநோயாளிகள் பராமரிப்பு மையங்கள், முதியோர் இல்லங்கள் ஆகியவற்றுக்கு அரிசி, கோதுமை, பயிறு உட்பட 3,100 குவின்டால் உணவு பொருட்கள் வழக்கப்பட்டுள்ளன. மேலும், சாலையோரம் வசிக்கும் மக்களுக்கும் இந்த உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. என்னதான் பணம் சம்பாதித்து வெளிநாட்டில் வசித்தாலும், தனது தாய்நாட்டில் மக்கள் துன்பப்படும்போது தேடிவந்து உதவி செய்த விகாஸ் கண்ணாவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT