Advertisment

மோடி பயங்கரவாதியை போல இருக்கிறார்- விஜயசாந்தி சர்ச்சை பேச்சு

vijaya shanthi

பிரதமர் மோடி, பயங்கரவாதி போல இருக்கிறார் என்று நடிகையும் காங்கிரஸ் பிரமுகருமான விஜயசாந்தி பேசியிருப்பது சர்ச்சையை எற்படுத்தியுள்ளது.

Advertisment

நேற்று ஐதராபாத்தில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய நடிகை விஜயசாந்தி, “வரும் நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடிக்கும் ராகுல் காந்திக்கும்தான் போர். பிரதமர் மோடி சர்வாதிகாரியை போல ஆட்சி நடத்துகிறார். அவர் ஜனநாயகத்தைக் கொன்றுவிட்டார். அவர் எப்போது எங்கு குண்டு வீசுவார் என்று மக்கள் பயந்துகொண்டே இருக்கின்றனர். மக்களை விரும்புவதற்கு பதிலாக அவர்களை பயமுறுத்தும் பயங்கரவாதியாக அவர் இருக்கிறார். அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கிவிடக்கூடாது” என்று ஆவேசமாக பேசினார். இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Advertisment

congress modi vijaya shanthi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe