Skip to main content

"கடனைத் திருப்பிச் செலுத்துகிறேன், ஆனால்..." கண்டிஷன் போடும் விஜய் மல்லையா...

Published on 14/05/2020 | Edited on 14/05/2020

 

vijay mallya about repaying his debt

 

வங்கிகளில் பெற்ற 100 சதவீதக் கடன்களையும் திருப்பிச் செலுத்துவதாகவும், ஆனால் அதற்குப் பதிலாக தன் மீது உள்ள வழக்குகள் அனைத்தையும் கைவிட வேண்டும் என்றும் விஜய் மல்லையா மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பிச் சென்ற விஜய் மல்லையாவை மீண்டும் இந்தியா அழைத்து வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இது தொடர்பான வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் மத்திய அரசுக்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார் விஜய் மல்லையா. மத்திய அரசு அறிவித்த 20 லட்சம் கோடி நிதியுதவி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த அவர், "கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பொருளாதாரத்தை மீட்க இந்திய அரசு ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்களை அறிவித்தமைக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இந்திய அரசு அவர்களின் தேவைக்கு ஏற்றார்போல் ரூபாய் நோட்டுகளை அச்சிடலாம்.

ஆனால், என்னைப் போன்ற சிறு பங்களிப்பாளர் 100 சதவீதம் கடனை வங்கிகளிடம் திருப்பிச் செலுத்துகிறேன் எனப் பலமுறை கோரிக்கை விடுத்தும் தொடர்ந்து புறந்தள்ளப்படுகிறது. நான் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய அனைத்துக் கடன்களையும் செலுத்திவிடுகிறேன், நிபந்தனையில்லாமல் ஏற்றுக்கொண்டு, எனக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் கைவிடுங்கள் என மத்திய அரசிடம் கேட்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்