Advertisment

விஜய் மல்லையாவின் பினாமி ராகுல் காந்தி-பாஜக

soni raahul

Advertisment

இந்திய வங்கிகள் பலவற்றில் 9000 கோடிக்கு கடனை பெற்றுவிட்டு, அதை திருப்பி அளிக்காமல் லண்டனுக்கு ஓடிய விஜய் மல்லையா நிதி அமைச்சரை சந்தித்துவிட்டுதான் லண்டன் சென்றார் என்பது ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு இந்த குற்றச்சாட்டை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டிற்கு பதில் குற்றச்சாட்டாக பாஜக ஒன்றை கூறியுள்ளது. அது என்ன என்றால்,” கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ராகுல் காந்தி, சோனியா காந்தி பினாமி என்பதுதான். மேலும்,”கிங்ஃபிஷர் விமான நிறுவனத்திற்கு காங்கிரஸ் அரசு சலுகை காட்டியதற்கான கடித ஆதாரங்கள் உள்ளதாக பாரதிய ஜனதாவின் தேசிய செய்தி தொடர்பாளர் பத்ரா கூறியுள்ளார். மல்லையாவின் விமான நிறுவனத்திற்கு சாதகமாக விதிகளை காங்கிரஸ் அரசு மாற்றியதாகவும் பின்னர் சோனியா காந்தி குடும்பம் முதல் வகுப்பில் இலவசமாக பயணம் மேற்கொண்டு வந்ததார்கள்” என்று பாஜக செய்தி தொடர்பாளர் பத்ரா கூறியுள்ளார்.

மேலும் இன்னுமொரு குற்றச்சாட்டாக, நிரவ் மோடியை ராகுல் காந்தி டெல்லியில் சந்தித்துள்ளார் என்று ஷேக்தாத் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

vijay malaya Arun Jaitley Rahul gandhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe