Skip to main content

பெண்களை சமைக்க சொல்வது சரியா..? வித்யா பாலன் கேள்வி!

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

கேரளாவை சேர்ந்த வித்யாபாலன் தமிழ் படங்களில் நடிக்க முயன்று முடியாமல் போனதால் பாலிவுட் பக்கம் சென்றார். அங்கு அவர் முன்னணி நடிகையானார். அதைத்தொடர்ந்து பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் பெண்களை சமைக்க சொல்வது தவறான வழிமுறைகளில் ஒன்று என்று கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசும்போது, "எனக்கு சமைக்க வராது. சமையல் கற்றுக்கொள்ள ஆசையும் இல்லை. 2012-ல் தயாரிப்பாளர் சித்தார்த் ராய்கபூரை திருமணம் செய்தபோது இனிமேலாவது சமையல் கற்றுக்கொள் என்று எனது தாயார் கூறினார். ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்? இப்போது நிறைய சம்பாதிக்கிறேன். வேண்டுமானால் சமையல்காரர் வைத்துக்கொள்கிறேன் என்றேன். அதுவும் இல்லையென்றால் வெளியே போய் சாப்பிட்டுக் கொள்கிறோம். எனக்கு இந்த சமையல் கற்றுக்கொள்வதில் ஆர்வம் இல்லை என்றும் பதில் சொன்னேன். சமையல் கற்றுக்கொள் என்று சொல்வதை விட சமையல் தெரிந்தவரை திருமணம் செய்து கொள் என்று ஏன் சொல்ல மாட்டேன் என்கிறாய் என்று அம்மாவிடம் திருப்பி கேட்டேன்.
 

dxfnh



இவர்தான் இந்த வேலையை செய்ய வேண்டும் என்று தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்கும் வழக்கத்தை ஏற்க மாட்டேன். சமையல் பெண்கள்தான் செய்ய வேண்டும் என்பதை பெற்றோரே நம்மீது திணித்துக்கொண்டு வருகிறார்கள். இதை நான் எதிர்க்கிறேன். யாருக்கு ஆர்வம் இருக்கிறதோ அவர்கள் செய்யலாம். ஆர்வம் இல்லாதவர்களை செய்துதான் ஆகவேண்டும் என்று பலவந்தப்படுத்துவது எனக்கு பிடிக்காது. எனது எண்ணத்தை கணவர் நன்றாக புரிந்து கொண்டார். அதனால் எனக்கு சமையல் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை" இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கமலுக்கு ஜோடியாகும் அஜித் படத்தில் என்ட்ரி கொடுத்த முன்னணி இந்தி ஹீரோயின்?

Published on 29/04/2023 | Edited on 29/04/2023

 

vidya balan to pair kamalhaasan 234 novie

 

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை முடித்துவிட்டு மணிரத்னம், மகேஷ் நாராயணன், பா.ரஞ்சித் உள்ளிட்ட இயக்குநர்களுடன் பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளார். இதனிடையே அ.வினோத் அல்லது வெற்றிமாறனுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. 

 

இந்த நிலையில் மணிரத்னத்துடன் கூட்டணி அமைக்கவுள்ள படம் கமலின் 234வது படமாக உருவாகவுள்ளது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னத்துடன் கமல் கூட்டணி அமைத்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தை கமல்ஹாசனும் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து வழங்க 'ராஜ் கமல்' மற்றும் 'மெட்ராஸ் டாக்கீஸ்' தயாரிக்கின்றனர். இசைப்பணிகளை ஏ.ஆர்.ரஹ்மான் மேற்கொள்கிறார். 

 

இப்படத்தில் த்ரிஷாவை கதாநாயகியாக நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக முன்பு தகவல் வெளியானது. இதையடுத்து நயன்தாராவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இப்படம் மூலம் அவர் முதல் முறையாக கமலுடன் ஜோடி போடவுள்ளதாகவும் கூறப்பட்டது. 

 

இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் லேட்டஸ்ட் தகவலின் படி பிரபல இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகப் பேசப்படுகிறது. பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யாபாலன் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருப்பார். இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் இரண்டாவது முறையாக அவர் தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார். மேலும், முதல் முறையாக கமலுடன் இணைந்து நடிக்கவுள்ளார். 

 

 

Next Story

"எனக்கு அப்படி எந்த ஒரு நோக்கமும் கிடையாது" - வித்யா பாலன் திட்டவட்டம்!

Published on 14/08/2020 | Edited on 14/08/2020
fsaf

 

 

மனித கணினி என்று அழைக்கப்படும் சகுந்தலா தேவி வாழ்க்கையை மையமாக வைத்து வித்யா பாலன் நடிப்பில் உருவாகியுள்ள 'சகுந்தலா தேவி' திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. ரசிகர்களிடையே இப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தான் திரைத்துறையில் எடுக்கும் முக்கிய முடிவுகள் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில்...

 

"நான் சில ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து என் மனம் சொல்வதை கேட்டுப் பின்பற்ற ஆரம்பித்தேன். அது முடிவெடுக்க எனக்கு எளிதாக இருந்தது. நான் என்னை எந்த விதத்திலும் புரட்சி முடிவு எடுப்பவளாக பார்க்கவில்லை. தங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறதோ அதை செய்யாமல் தங்களுக்கு பிடித்ததை செய்யும் போது அவர்கள் புரட்சி முடிவு எடுப்பதாக கூறுகிறோம் என நினைக்கிறேன். எனக்கு அப்படி எந்த ஒரு புரட்சி நோக்கமும் கிடையாது. எனக்கு பிடித்ததை செய்தேன்" என கூறியுள்ளார்.