/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/n222705.jpg)
வங்கியில் கடன் பெறுவதில் மோசடி செய்ததாகவீடியோகான்நிறுவனத்தின் தலைவர் வேணுகோபால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் நிகழ்ந்த மோசடி தொடர்பாக, சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், முதல்கட்ட விசாரணையில்வீடியோகான்நிறுவன குழுமத்திற்கு 1,770 கோடி ரூபாய் மதிப்பிலான ஆறு கடன்கள் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. கடந்த 2009 ஜூன் மாதம் முதல் 2011 அக்டோபர் வரையில் வழங்கப்பட்ட இந்த கடன்களில் வங்கியினுடைய கொள்கை மீறப்பட்டதும் தெரியவந்தது.
இதனால்ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு 1,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்புஏற்பட்டதாகதகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்துஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாகி சந்தாகோச்சார்மற்றும் அவருடைய கணவர் தீபக்கோச்சார்ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், வங்கியில் கடன் பெறுவதில் மோசடி செய்ததாகவீடியோகான்நிறுவனதலைவர் வேணுகோபாலையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)