Advertisment

காணொளி மூலம் திருமணம் செய்ய அனுமதி; உயர் நீதிமன்றம் அதிரடி

video conference marriage accept kerala high court  

கேரள மாநிலத்தில் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்பவர்கள் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாகவருகை தர வேண்டும். இவர்களுடன் சாட்சிகளும் பதிவாளர் முன்பு நேரடியாக ஆஜரானால் மட்டுமே திருமணத்தை பதிவு செய்ய முடியும் என சட்ட விதிகள்உள்ளன. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தை சேர்ந்த தன்யா மார்ட்டின் என்பவர் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை செய்தார்.

Advertisment

அந்த மனுவில் தான் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய மனு அளித்து உள்ளேன். இருப்பினும் கொரோனா பெருந்தொற்றின்மூலம் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக வெளிநாட்டில் உள்ள தனது காதலனால் உடனடியாக சொந்த ஊரான கேரளாவிற்குவர முடியாது என்பதால் காணொலி மூலம் திருமணத்தை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றுகுறிப்பிட்டிருந்தார். மற்ற சிலரும் இதேபோல் காணொளிமூலம் தங்களதுதிருமணத்திற்கு அனுமதி அளிக்கக் கோரி கேரளாவில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்தனர்.

Advertisment

இந்தமனுக்களை ஏற்க மறுத்த பல்வேறு நீதிமன்ற நீதிபதிகள் இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு மனுக்களை அனுப்பி வைத்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றநீதிபதிகளான முகமது முஷ்டாக் மற்றும் சோபி தாமஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணங்களை காணொளிமூலம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டனர். மேலும் 2000ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் படி மின்னணு ஆவணங்களுக்கு சட்டத்தில் அனுமதி உண்டு என்பதால் காணொளிமூலம் திருமணம் நடத்துவதில் தவறில்லை என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

marriage highcourt thiruvananthapuram Kerala
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe