Advertisment

'கரோனா ஒருபுறம்... வெட்டுக்கிளிகள் மறுபுறம்' - திணறும் பொதுமக்கள்!

ிு

சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படம் வெளிவந்து பரபரப்பைக்கிளப்பியது. அந்தப் படத்தில் எதிரிகள் விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகளைப் பரப்பி நிலங்களில் உள்ள பயிர்கள் முழுவதும் அழிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும். சினிமாவுக்காக இடம் பெற்ற அந்தக் காட்சிகள், தற்போது வட மாநிலங்களில் நேரடியாக நடந்து வரும் உண்மை சம்பவங்களோடு ஒத்துப்போவதுவியப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபை பயிர்களைச் சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகள் இந்தியாவிற்கு வர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. ஏற்கனவே ஆப்பிரிக்க நாடுகளான சோமாலியா, கென்யா நாடுகளைப் பாதித்த அந்த வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியாகத் தற்போது இந்தியா வந்துள்ளன.

Advertisment

ராஜஸ்தான் மாநிலத்தில் கூட்டம் கூட்டமாகப் படையெடுத்து வரும் வெட்டுக்கிளிகள் அங்குள்ள விளைநிலங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் என்ன செய்வதென்று புரியாமல் முழித்து வருகிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக வேளான் துறை வழக்கமாக வெட்டுக்கிளிகள் வட மாநிலங்களைத் தாண்டி தக்காண பீடபூமி பகுதிக்கு வராது என்று கூறியுள்ளனர். இந்நிலையில் இந்திய அரசு வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் வெட்டுக்கிளிகள் இந்தியாவிற்கு வரும், இந்த ஆண்டு பாகிஸ்தான் வெட்டுகிளிகள் விஷயத்தில் அலட்சியமாக நடந்துகொண்டதால் முன்கூட்டியே அதன் படையெடுப்பு நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

Advertisment

corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe