
குஜராத்தில்மிக மிக பலத்த கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வருகிறது. அண்மையில் குஜராத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் வாகனங்கள், கால்நடைகள் அடித்துச்செல்லும்வீடியோகாட்சிகள் வெளியாகி வைரலாகி இருந்தது.
தொடர் மழை காரணமாகஏற்கனவே மழை வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் குஜராத்தில்அடுத்து 24 மணி நேரத்தில் தெற்கு குஜராத், சௌராஷ்ட்ரா, கட்ச் வட்டாரங்களில் மிக பலத்த மழை பெய்யும் எனவும், துவாரகா, ராஜ்கோட், பவநகர், வல்சாத் மாவட்டங்களில் மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாளை வட குஜராத்தில் போர்பந்தர், பனஸ்கந்தா, மேசனா, சபர்கந்தா மாவட்டங்களிலும் அகமதாபாத்தில் ஒரு சில இடங்களிலும் மிக மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி அபிமன்யு தெரிவித்துள்ளார்.
Follow Us