Published on 10/12/2018 | Edited on 10/12/2018

இந்திய வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டன் தப்பிச்சென்றார் விஜய் மல்லையா. அமலாக்கத் துறையும் சிபிஐயும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவருடைய சொத்துக்களை முடக்கியது. மேலும் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவருவதற்கான வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வர உள்ளது. இன்று இறுதி தீர்ப்பு வரவுள்ள நிலையில், எந்த நேரமும் அவர் இந்தியா திரும்பவோ அல்லது தீர்ப்பை எதிர்த்து ஐரோப்பிய நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவோ வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.