ADVERTISEMENT

டெல்லி அரசின் திட்டத்தில் சேர்க்கப்பட்ட வேளாங்கண்ணி !

02:13 PM Nov 24, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு, முக்யமந்த்ரி தீர்த்த யாத்ரா யோஜ்னா என்ற பெயரில் 60 அல்லது அதற்கும் மேற்பட்ட முதியவர்களுடன் இலவச யாத்திரை திட்டத்தைச் செயல்படுத்திவந்தது. இந்த திட்டத்தின் கீழ் பூரி, ராமேஸ்வரம், ஷீரடி, திருப்பதி போன்ற 10க்கும் மேற்பட்ட இடங்களுக்கு முதியவர்களை டெல்லி அரசே இலவசமாக அழைத்துச் சென்றுவந்தது.

இந்தச் சூழலில் கரோனா பரவல் காரணமாக இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் இந்த இலவச யாத்திரை திட்டம் தொடங்கவுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். வரும் டிசம்பர் மூன்றாம் தேதி அயோத்திக்கு முதியோர்களை ஏற்றிச் செல்லும் ரயில், டெல்லியிலிருந்து புறப்படவுள்ளதாகவும், இந்த இலவச யாத்திரையில் பங்கேற்கும் முதியவர்கள் ஸ்ரீராம் லல்லாவை தரிசிப்பார்கள் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

மேலும் அரவிந்த் கெஜ்ரிவால், இந்த முதியவர்களுக்கான இலவச யாத்திரை திட்டத்தில் தமிழ்நாட்டின் வேளாங்கண்ணியும் இணைக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT