Advertisment

உள்ளே சென்றது வாகனம்... டெல்லி போலீசார் வருகை... பரபரப்பில் ப.சிதம்பரம் வீடு!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்தன்மீது எந்தவித குற்றச்சாட்டும் இல்லை என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில்செய்தியாளர்களைசந்தித்து விளக்கம் அளித்த நிலையில், அவர் டெல்லியில் உள்ளஅவரது வீட்டிற்கு சென்றார்.அவரை பின்தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் உள்ள சிதம்பரத்தின் வீட்டிற்கு விசாரணை நடத்த சென்றனர்.

Advertisment

police

வீட்டின் கதவை தட்டியும் திறக்காததால் காம்பவுண்ட் சுவர் மீது ஏறி குதித்துஉள்ளே சென்ற அதிகாரிகள் ப.சிதம்பரத்தின் வீட்டின் தரைதளத்தில் காத்துக்கொண்டிருந்த நிலையில், வீட்டின்முன்பகுதி மற்றும் பின்பகுதி வழியாக அதிகாரிகள் குழுஉள்ளே சென்றது.அதேபோல் வாகனம் ஒன்றும் அவரது வீட்டிற்கு உள் பகுதியில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Advertisment

சிதம்பரத்தின் இல்லத்திற்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு தொற்றியுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை இதனால் ஏற்படலாம் என சிபிஐ கோரியதால் டெல்லி போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

arrest CBI CHITHAMPARAM congress
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe